தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

அவெஞ்சர்ஸில் ஷில்பாவாக மாறிய விஜய்சேதுபதியை பார்: நெட்டிசன்கள் கலாய்! - iron man

ஸ்டார்க் மாதிரி பேசணும், ஷில்பா மாதிரி பேசக்கூடாது என அவெஞ்சர்ஸ் படத்தின் நடிகர் விஜய் சேதுபதியின் குரலை நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

அவெஞ்சர்ஸ்ல் ஷில்பாவாக மாறிய விஜய்சேதுபதியை பார்: நெட்டிசன்கள் கலாய்!

By

Published : Apr 6, 2019, 11:35 AM IST

அவெஞ்சர்ஸ் படத்தின் நான்காவது பாகமான 'அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்' ஏப்ரல் மாதம் 26ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரெய்லர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும் புதிதாக படத்தின் கதாபாத்திரங்களுக்கு பின்னணி குரல் சேர்ப்பு குறித்து பலவிதமான கருத்துகளை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

'அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்' படத்தில், அயர்ன்மேன் கேரக்டருக்கு தமிழில் டப்பிங் பேசியுள்ளார் நடிகர் விஜய் சேதுபதி. இதேபோன்று பிளாக் விடோ கதாபாத்திரத்திற்கு நடிகை ஆன்ட்ரியா டப்பிங் பேசியுள்ளார்.

இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதியின் குரல் அயர்ன்மேன் கதாபாத்திரத்திற்கு பொருந்தவில்லை என்று பதிவுகளும் மீம்ஸ்களும் அதிக அளவில் சமூக வலைத்தளங்களில் பதியப்பட்டு வருகிறது.

அவெஞ்சர்ஸ்-ல நீங்க ஸ்டார்க் மாதிரி பேசணும், ஷில்பா மாதிரி பேசக்கூடாது என்ற வகையில் பல்வேறு விதமான மீம்ஸ்கள் பதிவுகளும் தற்பொழுது சமூக வலைதளங்களில் உலா வருகின்றன.

ABOUT THE AUTHOR

...view details