தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

அவெஞ்சர்ஸ்ஸை அலறவைத்த தமிழ் ராக்கர்ஸ் - தமிழ் ராக்கர்ஸ்

உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் திரைப்படத்தை தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் வெளியிட்டு படக்குழுவினரை திணற வைத்துள்ளது.

poster

By

Published : Apr 25, 2019, 12:12 PM IST

புதிய படங்கள் தியேட்டரில் வெளியாகும் அன்று தமிழ் ராக்கர்ஸ் இணையத்தளம் அத்திரைப்படம் இணையத்தில் வெளியிட்டு வருகிறது. இதை தடுக்க பல முயற்சிகள் எடுக்கப்பட்டு வந்தாலும் அதற்கு ஒரு பலனும் இல்லை.

இந்நிலையில் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. ஆனால் படம் வெளியாகும் முன்பே தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியானதால் படக்குழுவினர் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அதிக பொருட் செலவில் உருவாகியுள்ள இப்படம், முந்தைய ஹாலிவுட் படங்களின் வசூல் சாதனையை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தின் ஒரு பகுதியை தமிழ் ராக்கர்ஸ் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

avengers tamilrockers

இந்த படத்திற்காக கடந்த ஒரு மாதமாக பல்வேறு வகையிலான விளம்பரங்களை படக்குழு செய்து வருகின்றன. இசைப்புயல் ஏ.ஆர். ரகுமானும் இப்படத்திற்கான தீம் பாடலை பாடி இசை ஆல்பமாக வெளியிட்டிருந்தார்.

இருப்பினும் பல கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட இப்படம் இணையத்தில் வெளியானாலும், படத்தை கண்டிப்பாக தியேட்டர் சென்றுதான் பார்ப்போம் என்று கூறுகின்றனர் மார்வெல் ரசிகர்கள்.

மேலும், இப்படம் டிக்கெட் விற்பனையில் புதிய சாதனை படைத்துள்ளது. பெரும் நகரங்களில் இணையதளம் மூலமாக வார இறுதிக்கான காட்சிக்கு 2.25 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளது. அதாவது ஒரு நொடிக்கு 18 டிக்கெட்கள் விற்பனை செய்யப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details