உலகம் முழுவதும் மிகவும் எதிர்பார்த்த 'அவெஞ்சர்ஸ்' படத்தின் கடைசி பாகமான 'அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்' ஏப்ரல் மாதம் வெளியானது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவிக்க ஆரம்பித்தது. படம் வெளியான சில நாட்களிலேயே 'டைட்டானிக்' வசூலை முறியடித்தது.
தற்போது இப்படம் அவதார் படத்தின் வசூல் சாதனையை முறியடித்து பாக்ஸ் ஆபீஸ் வசூலில் முதலிடத்தை பிடித்துள்ளதாக 'மார்வல்' நிறுவனத்தின் தலைவர் கெவின் பிட்ச் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.
இப்போது 'அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்' 2.789 பில்லியன் டாலர் வசூல் செய்து அவதார் படத்தை பின்னுக்கு தள்ளி, முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.
இந்தச் சாதனைக்கு டிஸ்னி ஸ்டூடியோஸ், ‘மார்வல் ஸ்டூடியோஸ் நிறுவனத்திற்கு வாழ்த்துகள். இந்தப் படத்தை மாபெரும் வெற்றிப்படமாக்கிய ரசிகர்களுக்கு நன்றி’ என தெரிவித்துள்ளது.