பாலாவின் இயக்கத்தில் ஆர்யா - விஷால் நடிப்பில் 2011ஆம் ஆண்டு வெளியான படம் 'அவன் இவன்'. இந்தப் படத்தில் சிங்கம்பட்டி ஜமீனையும் சொரிமுத்து அய்யனார் கோயிலையும் தவறாகச் சித்திரிப்பதாகக் கூறி இயக்குநர் பாலா, நடிகர் ஆர்யா மீது அம்பாசமுத்திரம் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
'அவன் இவன்' பட விவகாரம்: வருத்தம் தெரிவித்த ஆர்யா, வழக்கை முடித்துவைத்த நீதிமன்றம்! - ஆர்யாவின் அவன் இவன்
திருநெல்வேலி: 'அவன் இவன்' படம் விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் முன்னிலையாகி நடிகர் ஆர்யா வருத்தம் தெரிவித்ததையடுத்து அவர் மீதான வழக்கு முடித்துவைக்கப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை பிப்ரவரி மாதம் 20ஆம் தேதி நடைபெற்றது. அப்போது ஆர்யா நேரில் முன்னிலையாகவில்லை. அப்போது நீதிபதி ஆர்யாவிற்குப் பிடியாணை பிறப்பித்திருந்தார். இதனையடுத்து இன்று (மார்ச் 29) நடைபெற்ற விசாரணையில் நடிகர் ஆர்யா நீதிமன்றத்தில் முன்னிலையானார்.
அப்போது, படத்தில் காட்டப்பட்ட சம்பவத்துக்கு ஆர்யா வருத்தம் தெரிவித்ததோடு சமாதானம் செய்வதாகத் தெரிவித்துள்ளார். இதையடுத்து நீதிபதி ஆர்யா மீதான வழக்கை முடித்துவைத்தார். தொடர்ந்து இயக்குநர் பாலா மீதான வழக்குத் தொடர்ந்து விசாரணையில் உள்ளது.