தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'அப்போ ரேஸ் கார் டிரைவர்... இனி அடல்ட் நட்சத்திரம்' - கரோனாவால் இப்படி ஒரு முடிவெடுத்த பிரபலம்! - ஆஸ்திரேலிய முன்னாள் கார்பந்தய பெண் ஓட்டுநர் ரெனி கிரேஸி

பிரபல பந்தய கார் பெண் ஓட்டுநர், தற்போது அடல்ட் நட்சத்திரமாக மாற முடிவு செய்துள்ளார்.

renee gracie
renee gracie

By

Published : Jun 9, 2020, 10:41 PM IST

உலகப்பெருந்தொற்றான கரோனா வைரஸால் நாளுக்கு நாள், பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. இதனால், உலகின் பல நாடுகளில் தேசிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்த ஊரடங்கால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதித்துள்ளது. அதுமட்டுமல்லாது, நிதி நெருக்கடியையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ஆஸ்திரேலிய முன்னாள் கார் பந்தய பெண் ஓட்டுநர் ரெனி கிரேஸி, அடல்ட் நட்சத்திரமாக மாற முடிவு செய்துள்ளார். 25 வயதான இவர் இந்த முடிவு எடுப்பதற்கு, கரோனாவால் ஏற்பட்ட நிதி நெருக்கடியே காரணம் எனவும் கூறியுள்ளார்.

இந்த முடிவு குறித்து ரெனி கிரேஸி கூறுகையில், 'நான் அடல்ட் நட்சத்திரமாக மாற என்னை முடிவெடுக்க வைத்தது, தற்போதைய நிதி நெருக்கடியே. நான் இந்த துறைக்கு வருவேன் என கனவில் கூட நினைத்தது இல்லை. இப்போது மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் நம்பினாலும் சரி, இல்லையென்றாலும் சரி; எனது இந்த முடிவு என் தந்தைக்குத் தெரியும். அவரும் இதை ஆதரித்துள்ளார்' எனக்கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details