ஆஸ்திரேலியாவின் அதிரடி கிரிக்கெட் வீரரான டேவிட் வார்னர், சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர். அவ்வப்போது இவர் பதிவிடும் பதிவுகள் பட்டித்தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பும் வகையில் வைரலாகிவிடும். தெலுங்கு பாடலான 'புட்டபொம்மா... புட்டபொம்மா' பாடலுக்கு டிக்-டாக்கில் குடும்பத்துடன் இவர் போட்ட குத்தாட்டம் இணையத்தில் செம டிரெண்டிங் ஆனது.
அதனைத் தொடர்ந்து வார்னர் 'பாகுபலி' பட வசனங்களை பேசியும் வெளியிட்ட வீடியோ தென்னிந்தியா ரசிகர்களை கவர்ந்து. அதுவரை டிக்-டாக்கில் வீடியோ செய்து தனது சமூக வலைதளத்தில் பதிவிட்ட வார்னர், இந்தியாவில் டிக்-டாக் தடை செய்தையடுத்து ஃபேஸ் ஆப் மூலம் வீடியோ எடுத்து தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.
இந்த ஆப்பில் படத்தின் நாயகனின் முகத்திற்குப் பதிலாக தனது முகத்தை வைத்து வசனங்களை பேசலாம். இந்த ஆப்பை பயன்படுத்தி டேவிட் வார்னர் வெளியிடும் வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. சமீபத்தில் இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் '2.0', 'தர்பார்' உள்ளிட்ட படங்களின் காட்சியில் ரஜினியாக தோன்றி ரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்தினார். அதேபோன்று கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் கமல் போன்றே முகப்பாவனை செய்து கலக்கியுள்ளார் வார்னர்.