தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'தேரும் போரும்' படத்தில் தினேஷூக்கு இந்த கதாபாத்திரமா...! - ஜல்லிகட்டு

'அட்டகத்தி' தினேஷ் நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்தின் பெயரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

dinesh
dinesh

By

Published : Feb 21, 2020, 8:22 PM IST

'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு' படத்தைத் தொடர்ந்து 'அட்டகத்தி' தினேஷ் இயக்குநர் விக்ரம் சண்முகம் இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படத்தில் நடிக்க உள்ளார். நல்லு சாமி பிக்சர்ஸ் சார்பாக தாய் சரவணன் தயரிக்கிறார். ஜஸ்டின் பிரபாகர் இசையமைக்கிறார்.

இந்நிலையில் இப்படத்திற்கு 'தேரும் போரும்' என பெயரை தலைப்பாக படக்குழு வைத்துள்ளது. இதில் தினேஷ் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரராக நடிக்கிறார். அதுமட்டுமல்லாது கிராமத்து பின்னணியை கொண்ட கதைக்களமாக இப்படம் உருவாக உள்ளது. விரைவில் இப்படம் குறித்த மற்ற அப்டேட்களை படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் வாசிங்க: சத்தமின்றி காதல் படத்தில் நடித்து முடித்த அட்டகத்தி தினேஷ்!

ABOUT THE AUTHOR

...view details