பா. இரஞ்சித் இயக்கத்தில் 'அட்டகத்தி' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் தினேஷ். சிறு சிறு வேடங்களில் நடித்துவந்த அவருக்கு 'அட்டகத்தி' படம் முகவரியாக அமைந்தது. இந்தப் படத்தைத் தொடர்ந்து 'திருடன் போலீஸ்', 'விசாரணை', 'குக்கூ', 'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு', 'நானும் சிங்கிள்தான்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இயக்குநர் அவதாரம் எடுத்த 'அட்டகத்தி' தினேஷ் - நடிகர் தினேஷின் வயிறுடா
சென்னை: நடிகர் 'அட்டகத்தி' தினேஷ் புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார்.
![இயக்குநர் அவதாரம் எடுத்த 'அட்டகத்தி' தினேஷ் vayiruda](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-11211707-761-11211707-1617098699951.jpg)
vayiruda
இவர் தற்போது இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார். 'வயிருடா' என்ற படத்தை இயக்க உள்ளதாகவும் அதன் போஸ்டரையும் தினேஷ் வெளியிட்டுள்ளார். இப்படம் குறித்த அடுத்தடுத்த அறிவிப்புகளை விரைவில் வெளியிட உள்ளதாகவும் தினேஷ் தெரிவித்துள்ளார்.