தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

’அந்தகாரம்’ - அட்லி பட ட்ரெய்லரை வெளியிட்ட விஜய் சேதுபதி! - அட்லி

இயக்குநர் அட்லி தயாரித்துள்ள இரண்டாவது படமான ’அந்தகாரம்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது.

அந்தகாரம்
அந்தகாரம்

By

Published : Apr 14, 2020, 7:13 PM IST

'பிகில்' படத்தைத் தொடர்ந்து, ஷாரூக்கான் நடிக்கவுள்ள படத்தை இயக்குநர் அட்லி இயக்கவுள்ளதாக தகவல் வெளியானது. இருப்பினும், அது குறித்த முறையான அறிவிப்பு வெளியாகவில்லை. இதற்கிடையில் இயக்குநர் அட்லி தனது அடுத்த படத்தைச் சத்தமின்றி தயாரித்து முடித்துள்ளார்.

அர்ஜுன் தாஸ், வினோத் கிஷன், மீஷா கோஷல், பூஜா ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்த இப்படத்திற்கு 'அந்தகாரம்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. சுசி சித்தார்த் இயக்கிய இப்படத்தில், ஒளிப்பதிவாளராக அமுதன் பணிபுரிந்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லரை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.

பார்வையற்ற ஒருவர் மற்றும் அர்ஜுன் தாஸ் ஆகியோர் இடையே நடக்கும் ஆடுபுலி ஆட்டம் தான் படத்தின் கதை என்று ட்ரைலரைப் பார்க்கும் போது தெறிகிறது. த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. முன்னதாக, ஜீவா நடிப்பில் வெளியான 'சங்கிலி புங்கிலி கதவதொற' படத்தின் மூலம், இயக்குநர் அட்லி தயாரிப்பாளராக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:சுவரின் மேல் கால் வைத்து உடற்பயிற்சி மேற்கொள்ளும் பூஜா

ABOUT THE AUTHOR

...view details