’ராஜா ராணி’ படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமானவர் அட்லி. அவர் அப்படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய்யுடன் இணைந்து 'தெறி', 'மெர்சல்' ஆகிய திரைப்படங்களில் பணியாற்றினார். அதன்பின் விஜய் - அட்லி மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்த 'பிகில்' திரைப்படம் சமீபத்தில் வெளியானது.
'பிகில்' நடிகைகளுடன் அட்லி டிக்-டாக்! இணையத்தில் பரவும் வீடியோ - atlee
'பிகில்' படத்தின் ஷூட்டிங்கின்போது இயக்குநர் அட்லி நடிகைகளுடன் டிக்-டாக் செய்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகிவருகிறது.
ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட தயாரித்திருந்த இத்திரைப்படத்தில் நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், கதிர், யோகி பாபு, இந்துஜா, விவேக் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். பெண்களின் கால்பந்தை மையமாக வைத்து உருவாக்கிய இத்திரைப்படம் ரூ. 200 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்ததோடு, இன்னும் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இதனிடையே இத்திரைப்படத்தின் ஷூட்டிங்கின்போது இயக்குநர் அட்லி, படத்தில் கால்பந்து வீராங்கனைகளாக நடித்திருந்த நடிகைகளுடன் டிக்-டாக் செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் ப்ரெண்டஸ் படத்தில் வடிவேலுவின் நேசமணி கதாபாத்திரத்தின் வசனத்தை பேசுகிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.