அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வெளியாகவுள்ள திரைப்படம் ‘பிகில்’. தீபாவளியை முன்னிட்டு இத்திரைப்படம் நாளை (அக்டோபர் 25) வெளியாகிறது. தற்போது அட்லி படம் குறித்தும், விஜய் குறித்து தனது ரசிகர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார். #AskAtlee என்ற ஹேஷ்டேக்கில் அவரிடம் பலரும் கேள்வி எழுப்பிவருகின்றனர். அதில் ஒரு ரசிகர் ‘பிகில்’ படத்தில் வரும் விஜய்யின் ராயப்பன் கதாபாத்திரம் குறித்து கேட்டதற்கு அட்லி பதில் அளித்துள்ளார்.
அனைவரும் ராயப்பன் கதாபாத்திரம் குறித்து அறிந்துகொள்ள ஆவலாக இருக்கிறோம். அதுபற்றி சர்ப்ரைஸா எங்களுக்கு ஏதாவது சொல்லுங்களேன் எனக் கேட்டதற்கு, இதுவரைக்கும் நான் பண்ணதுல வெற்றிமாறன் (மெர்சல்) கதாபாத்திரம்தான் பிடிக்கும். ஆனால் ‘பிகில்’ படத்துக்கு பிறகு ராயப்பன் கதாபாத்திரம்தான் பிடித்திருக்கிறது. உங்களுக்கும் அதுவாதான் இருக்கும். இப்போதைக்கு இதுதான் சர்ப்ரைஸ் என பதிலளித்துள்ளார்.