ரசிகர்களின் பலத்த எதிர்ப்பார்ப்புகளுக்கிடையே பிகில் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளதையொட்டி, தன் ரசிகர்களுடன் உரையாடும் விதமாக AMA எனப்படும் ஆஸ்க் மீ எனிதிங் கலந்துரையாடல் பகுதியை ட்விட்டரில் இயக்குநர் அட்லி தொடங்கியுள்ளார்.
#AskAtlee எனப்படும் தன் ட்விட்டர் ஹேண்டில் வழியாக, ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துவரும் இயக்குநர் அட்லி, நடிகர் விஜய், ஜாக்கி ஷெராஃப், பிகில் திரைப்படத்தின் கதாப்பாத்திரங்களைப் பற்றிய தகவல்கள் என ரசிகர்களின் பல்வேறு கேள்விகளுக்கும் உற்சாகமாக பதிலளித்துவருகிறார். விஜயை வைத்து எப்போது ஒரு முழுநீள கேங்ஸ்டர் படம் இயக்குவீர்கள் என்று கேட்ட ரசிகர் ஒருவருக்கு, ”செஞ்சாச்சே! பிகில் திரைப்படத்தைப் பாருங்கள்” என உற்சாகமாய் பதிலளித்துள்ளார்
நயன்தாராவின் கதாப்பாத்திரம்பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு, சந்தோஷமான, உணர்ச்சிகரமான, ஊக்குவிக்கும் ஒரு கதாப்பாத்திரம் என பதிலளித்துள்ள அட்லீ, ஜாக்கி ஷெராஃப் பற்றிய கேள்விக்கு, ஜாக்கி தன் நண்பர் என்றும், அவரின்மீது தனக்கு மிகுந்த மதிப்புள்ளதாகவும், ஜாக்கியுடன் பணியாற்றியது தனக்கு மிகுந்த உற்சாகத்தை அளிப்பதாகவும் கூறியுள்ளார்.