#AskAtlee எனப்படும் தன் ட்விட்டர் ஹேஷ்டேக் வழியாக அஜித் ரசிகர் ஒருவர் கேள்விக்கு அட்லி சுவரசியமாக பதிலளித்துள்ளார்.
ரசிகர்களின் பலத்த எதிர்ப்பார்ப்புகளுக்கிடையே பிகில் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளதையொட்டி, தன் ரசிகர்களுடன் உரையாடும் விதமாக AMA எனப்படும் ஆஸ்க் மீ எனிதிங் கலந்துரையாடல் பகுதியை ட்விட்டரில் இயக்குநர் அட்லி தொடங்கியுள்ளார்.
#AskAtlee எனப்படும் தன் ட்விட்டர் ஹேஷ்டேக் வழியாக, ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துவரும் இயக்குநர் அட்லி, நடிகர் விஜய், ஜாக்கி ஷெராஃப், பிகில் திரைப்படத்தின் கதாப்பாத்திரங்களைப் பற்றிய தகவல்கள் என ரசிகர்களின் பல்வேறு கேள்விகளுக்கும் உற்சாகமாக பதிலளித்து வருகிறார்.
அஜித் குறித்த அட்லி ட்வீட் அதில் ரசிகர் ஒருவர் அஜித் குறித்து ஒரே ஒரு வார்த்தை கூறுங்கள் என்று கேட்டதற்கு, அட்லி, நான் அஜித் மீது மிகப்பெரிய மரியாதை வைத்திருக்கிறேன். அஜித் நடித்த விஸ்வாசம் - நேர்கொண்ட பார்வை ஆகிய படங்கள் என்னுடைய ஃபேவரைட் படங்கள் என்று பதிலளித்துள்ளார். இவரின் இந்த பதிலால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
இதையும் வாசிங்க:'பிகில்' இயக்குநரின் மனைவியை சிறப்பித்த படத்தின் தயாரிப்பாளர்!