அட்லி - விஜய் கூட்டணியில் மூன்றாவது முறையாக வெளியான படம் 'பிகில்'. பெண்களின் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் விஜய் பயிற்சியாளராக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். தீபாவளி விருந்தாக வெளியான இப்படம் ரசிகர்களிடையை கலவையான விமர்சனங்களை பெற்று ரூ. 200 கோடிக்கு மேல் வசூலை குவித்து வருகிறது.
இதனையடுத்து அட்லி நடிகர் ஷாருக்கானை வைத்து புதிய படம் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகி வந்த நிலையில், நேற்று (நவ.2) தனது பிறந்தநாளை கொண்டாடிய ஷாருக்கான் அட்லியையும் அவரது மனைவி பிரியாவையும் அழைத்திருந்தார். அப்போது ஷாருக்கானுடன் அட்லியும் அவரது மனைவியும் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.