தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

சொல்லப்படாத ஆயிரம் கதைகள் எளிய மக்களிடம் உள்ளன - அதியன் ஆதிரை - தினேஷ்

மாற்றத்திற்கான ஊடகவியலாளர் மையம், பெரியார் சுயமரியாதை ஊடகத் துறை இணைந்து 'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு' படத்திற்கும் அதன் இயக்குநர் அதியன் ஆதிரைக்கும் பாராட்டு விழா, கலந்துரையாடல் நடத்தினார்கள்.

அதியன் ஆதிரை பாராட்டு விழா
அதியன் ஆதிரை பாராட்டு விழா

By

Published : Dec 16, 2019, 5:32 PM IST

இந்நிகழ்வில் கலந்துகொண்ட இயக்குநர் அதியன் ஆதிரையிடம் பல சுவாரஸ்யமான கேள்விகள் முன்வைக்கப்பட்டன. போர் குறித்தும், அதன் விளைவுகள் குறித்துமான அதியனின் புரிந்துணர்வு வந்திருந்தோரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. மேலும், இந்திய சமூக அமைப்பின் சிக்கல்கள் குறித்தும் கேட்கப்பட்ட தெளிவான கேள்விகளுக்கு மிக எளிமையாகப் பதிலளித்தார்.

அதியன் ஆதிரை பாராட்டு விழா

சினிமாவில் கதைப்பஞ்சம் நிலவுவதாகக் கூறுகிறார்களே, இந்நேரத்தில் திரைக்கு வந்திருக்கும் நீங்கள் இதை எப்படி எதிர்கொள்வீர்கள், நிஜமாகவே கதைப்பஞ்சம் என்பது இருக்கிறதா? என்ற கேள்விக்கு,

  • இங்கே ஒருதரப்பினரின் கதை மட்டும்தான் இத்தனை ஆண்டுகாலம் பேசப்பட்டுவருகிறது. அதனால் அவர்களுக்கு வேண்டுமானால் கதைகள் தீர்ந்து போயிருக்கலாம். ஆனால் சொல்லப்படாமல் ஆயிரம் கதைகள் எளிய மக்களான எங்களிடம் உள்ளன. எங்களிடம் கதைகளுக்கு பஞ்சமில்லை என்று பதிலளித்தார்.
    இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு

இதையும் படிங்க: ரிலையன்ஸ் நிறுவனம் வெளியிடும் ‘தர்பார்’?

ABOUT THE AUTHOR

...view details