தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

அதர்வா - சற்குணம் படப்பிடிப்பு தொடங்கியது! - சற்குணம் படங்கள்

சற்குணம் இயக்கத்தில் அதர்வா நடிக்கவுள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று (ஆகஸ்ட்.04) தொடங்கியுள்ளது.

adharva
adharva

By

Published : Aug 4, 2021, 4:57 PM IST

'களவாணி' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான சற்குணம், தொடர்ந்து 'வாகை சூட வா', 'நையாண்டி', 'சண்டிவீரன்', 'களவாணி 2' உள்ளிட்ட படங்களைக் கொடுத்துள்ளார். இதில் ‘சண்டிவீரன்’ படத்தில் அதர்வாவை இயக்கியிருந்தார்.

இவர் அடுத்ததாக அதர்வாவை வைத்து மீண்டும் ஒரு படத்தை இயக்கவுள்ளார். இதில் அவருடன் இணைந்து ராஜ்கிரண், ராதிகா சரத்குமார், சிங்கம்புலி, ஆர்.கே. சுரேஷ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

ஜிப்ரான் இசையமைக்கும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இன்று (ஆகஸ்ட்.04) தஞ்சாவூரில் தொடங்கியுள்ளது.

தற்போதைய தொற்றுநோய் சூழ்நிலையில், படக்குழு கடுமையான உடல்நலம், சுகாதார நெறிமுறைகளைப் பின்பற்றி படப்பிடிப்பை மேற்கொள்கிறது. படப்பிடிப்பை ஒரே கட்டமாக 50 நாட்களில் முடிக்க படக்குழு முடிவு செய்துள்ளது.

'Production No.22' என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படம், முழுக்க முழுக்க குடும்பங்கள் கொண்டாடும் குடும்ப பொழுதுபோக்கு சித்திரமாக உருவாகிறது.

இப்படத்தில் ராஜ் கிரண், ராதிகா சரத்குமார், ஜேபி, R.K. சுரேஷ், சிங்கம் புலி, கன்னட நடிகர் ரவி காலே, சத்ரு, பால சரவணன், ராஜ் அய்யப்பா, G.M. குமார் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது.

இதையும் படிங்க: ‘நவரசா’ அனுபவம் குறித்து அதர்வா

ABOUT THE AUTHOR

...view details