தமிழ்நாட்டில் கரோனா தொற்றின் 2ஆவது அலை மிக வேகமாகப் பரவி வருகிறது. இத்தொற்றால் அரசியல் பிரமுகர்கள், திரைப்பிரபலங்கள், பொதுமக்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
கரோனா தொற்றிலிருந்து மீண்ட அதர்வா - அதர்வா
சென்னை: நடிகர் அதர்வா தான் கரோனா தொற்றிலிருந்து மீண்டு நலமுடன் இருப்பதாக ட்வீட் செய்துள்ளார்.
நடிகர் அதர்வா கடந்த மாதம் 17ஆம் தேதி கரோனா தொற்று பாதிப்பு இருப்பதாகவும், அதனால் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில், அதர்வா தற்போது கரோனா தொற்றிலிருந்து மீண்டு இருப்பதாக ட்வீட் செய்துள்ளார். அதில், “எனக்கு கரோனா நெகட்டிவ் என வந்துள்ளது. எனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி. கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் விரைவில் மீண்டு வர வேண்டும். அவர்கள் நலமுடனும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.