தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

அதர்வா - அனுபமா இணையும் புதிய படம்...! - அதர்வா

சென்னைக் காதல் கதையை மையமாக வைத்து உருவாகவுள்ள புதிய படத்தில் நடிகர்கள் அதர்வா, அனுபமா பரமேஷ்வரன் ஆகியோர் இணைந்துள்ளனர்.

அதர்வா மற்றும் அனுபமா இணைய உள்ளார்கள்

By

Published : Jul 2, 2019, 11:58 AM IST

ஆர்.கண்ணன் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படம் ஒன்றில் நடிகர் அதர்வா முரளி, நடிகை அனுபமா பரமேஷ்வரம் ஆகியோர் ஒப்பந்தமாகியுள்ளனர். சென்னைக்காதல் கதையாக உருவாக உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை 15 ஆம் தேதி தொடங்க உள்ளது.

கடந்த மார்ச் மாதம் வெளியான பூமரங்கிற்குப் பிறகு இயக்குனர் கண்ணன் - அதர்வா ஆகியோர் மீண்டும் இணையவுள்ளனர். இந்த படம் மேகா ஆகாஷ் மற்றும் இந்துஜா ரவிச்சந்திரன் இணைந்து நடித்த ஒரு ஆக்ஷன் த்ரில்லர் படமாகும்.

இதுகுறித்து இயக்குனர் கண்ணன் கூறியதாவது,

“காதல், குடும்பங்கள் மற்றும் உறவுகள் பற்றிய கதை அம்சத்தைக் கொண்டு எனது அடுத்த படம் உருவாகவுள்ளது. அதர்வா, அனுபமா இருவருமே என் முதல் தேர்வாக இருந்தனர். வால்மீகியின் படப்பிடிப்பின் போது கூட அதர்வா இந்த படத்திற்காக ஒப்பந்தம் செய்தார். நாங்கள் ஒரு புதிய இளம் ஜோடியை விரும்பினோம், அதனால் அனுபமா பரமேஸ்வரனை அணுகினோம், அவரும் உடனடியாக ஒப்புக்கொண்டார். இப்படத்தில் பரதநாட்டிய நடனக் கலைஞராக அனுபமாவும், டெல்லியைச் சேர்ந்த பிஎச்டி ஆராய்ச்சி அறிஞராக அதர்வாவும் நடிக்கிறார். ”

ஜூலை 15 முதல் சென்னையில் 20 நாள் கால அட்டவணையைத் தொடர்ந்து, அமெரிக்கா அல்லது ஆஸ்திரேலியாவுக்குச் சென்று ஒரு சிறிய பகுதி படப்பிடிப்புக்கு எங்கள் குழு செல்ல உள்ளது. பிரேம் குமாரின் 96-ல் பணிபுரிந்த சண்முக சுந்தரம் ஒளிப்பதிவு செய்ய, வசனங்கள் கபிலன் வைரமுத்து செய்ய உள்ளார்.

இதற்கிடையில், ஒரு கிராமத்தில் முழு அளவிலான நகைச்சுவைத் படமாக நடிகர் சந்தானத்துடன் இணைந்து ஒரே நேரத்தில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details