தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

மைனஸ் 6 டிகிரி குளிரில் அதர்வா - 'பிரேமம்' மேரி - மைனஸ் 6 டிகிரி குளிரில் நடித்த அதர்வா அனுபமா

மைனஸ் 6 டிகிரி குளிர் மட்டுமில்லாமல், பனிப்பொழிவு, இரவுவரை மழை எனக் கடுமையான சூழ்நிலையில் அதர்வா, அனுபமா உள்ளிட்ட படக்குழுவினர்கள் படப்பிடிப்பை நிறுத்தாமல் நடத்தியுள்ளனர்.

Director R kannan new film
Actor Atharva and Anupama parameshwaran

By

Published : Jan 24, 2020, 7:15 AM IST

சென்னை: மைனஸ் 6 டிகிரி குளிரில் ஆர். கண்ணன் இயக்கத்தில் அதர்வா நடித்துவரும் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

பூமராங் படத்துக்குப் பிறகு இயக்குநர் ஆர். கண்ணன் - அதர்வா மீண்டும் புதிய படத்தில் கூட்டணி அமைத்துள்ளனர். இந்தப் படத்தில் பிரேமம், கொடி புகழ் அனுபமா பரமேஸ்வரன் கதாநாயகியாக நடிக்கிறார்.

தனுஷின் வேலையில்லா பட்டாரி படத்தில் நடித்த அமிதாஷ் பிரதான் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இன்னும் பெயர்வைக்கப்படாத இந்தப் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு அஜர்பைஜான் குடியரசில் கடந்த சில நாள்களாக நடைபெற்றது.

அங்கு தற்போது குளிர்காலம் நிலவும் நிலையில், மைனஸ் 6 டிகிரி கடுமையான குளிரில் அதர்வா, அனுபமா, அமிதாஷ் பிரதான் உள்ளிட்ட படக்குழுவினர்கள் படப்பிடிப்பை நடத்தியுள்ளனர்.

குளிர் மட்டுமில்லாமல் பனிப்பொழிவு, இரவுவரை மழை என தொடர்ந்தபோதிலும் நிறுத்தாமல் படப்பிடிப்பை முடித்துள்ளனர்.

இந்தத் தகவலை இயக்குநர் கண்ணன் தனது ட்விட்டரில் தெரிவித்திருப்பதுடன், கடுமையான சூழ்நிலையில் படப்பிடிப்பு நடத்து ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துள்ளார்.

இந்தப் படத்துக்கு கபிலன் வைரமுத்து வசனம் எழுதிகிறார். படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தொடங்கியுள்ளன.

விரைவில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்படவுள்ளன.

ABOUT THE AUTHOR

...view details