'களவாணி' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான சற்குணம் தொடர்ந்து 'வாகை சூட வா', 'நையாண்டி', 'சண்டிவீரன்', 'களவாணி 2' உள்ளிட்ட வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ளார்.
இவர் அடுத்ததாக அதர்வாவை வைத்து மீண்டும் ஒரு படத்தை இயக்கவுள்ளார். இதில் அவருடன் இணைந்து ராஜ்கிரண், ராதிகா சரத்குமார், சிங்கம்புலி, ஆர்.கே. சுரேஷ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
ஜிப்ரான் இசையமைக்கும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் பூஜை இன்று (ஜூலை 16) சென்னையில் எளிமையான முறையில் நடைபெற்றது. மேலும் படப்பிடிப்பு திருவையாறு, தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில் நடைபெறவுள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.