'குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும்', 'வானவராயன் வல்லவராயன்' படங்களைத் தொடர்ந்து இயக்குநர் ராஜமோகன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம், 'அட்ரஸ்'.
உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இதில், 'காளி' என்கிற புரட்சிகரமான கதாபாத்திரத்தில் அதர்வா முரளி நடித்துள்ளார்.
இப்படத்தில் கவுரவத்தோற்றத்தில் நடித்திருக்கும் அவர், ஒரு காதல் பாடலிலும், இரண்டு சண்டைக் காட்சிகளிலும் நடித்துள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கொடைக்கானலில், வெள்ளக்கவி கிராமத்தில் நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில் 'அட்ரஸ்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீஸர் இன்று (ஜூன்.23) வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.
மேலும் 'அட்ரஸ்' படத்தில் பூஜா ஜவ்வேரி, இசக்கி பரத், தம்பி ராமையா, தேவதர்ஷினி, ஏ.வெங்கடேஷ், மெட்ராஸ் நந்தகுமார், நாகேந்திரன், கோலி சோடா முத்து உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இதையும் படிங்க:கரோனா நிவாரண நிதி ரூ.1 லட்சம் வழங்கிய கனடா விஜய் ரசிகர்கள்