டெல்லி: ஷூட்டிங் இல்லாமல் வீட்டில் இருக்கும் கத்ரீனா கைஃப் கிட்டார் வாசிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
பாடல், பாடி கிட்டார் வாசிக்கும் விடியோவை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப். அதில், ”வேலை நடந்துகொண்டிருக்கிறது. இன்னும் சில நாள்களில் இதன் பலனைக் காணலாம்” என்று பதிவிட்டு #staysafe என்ற ஹேஷ்டாக்குடன் குறிப்பிட்டுள்ளார்.
ஆக்ஷன் திரைப்படமான சூர்யவன்ஷி படத்தில் அக்ஷய் குமார் ஜோடியாக நடித்துள்ள கத்ரீனா. இம்மாதம் இந்தப் படம் வெளியாகவாக இருந்த நிலையில் தற்போது தேதி குறிப்பிடாமல் தள்ளிப்போயுள்ளது. அந்தப் படத்தின் ரிலீஸை அவர் எதிர்நோக்கியுள்ளார்.