தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

தெலுங்கில் உருவாகும் தனுஷின் அசுரன் - ஹீரோ யார் தெரியுமா? - தெலுங்கில் உருவாகும் தனுஷின் அசுரன்

எழுத்தாளர் பூமணியின் 'வெக்கை' நாவலுக்கு 'அசுரன்' என்ற பெயரில் தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணி திரைவடிவம் கொடுத்து ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளனர். இப்போது இந்தப் படம் தெலுங்கு ரசிகர்களுக்கும் விருந்தாக பரிமாறப்படவுள்ளது.

அசுரன் படத்தில் தனுஷ்

By

Published : Oct 25, 2019, 1:55 PM IST

Updated : Oct 25, 2019, 6:27 PM IST

படத்தில் ஜிவி பிரகாஷின் பின்னணி இசை பெரிதும் பேசப்பட்டது. பஞ்சமி நில அரசியலை முன்வைத்து பேசிய இப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து 100 கோடி ரூபாய்க்கு மேல் பாக்ஸ் ஆபிஸில் வசூலை ஈட்டியுள்ளது.

இதையடுத்து 'அசுரன்' படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு முடிவு செய்துள்ளார். அதன்படி தெலுங்கு பதிப்பில் நடிகர் வெங்கடேஷ், தனுஷ் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். விரைவில் மற்ற நடிகர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.

முன்னதாக, வெங்கடேஷ் நடிப்பில் தெலுங்கில் சூப்பர் ஹிட்டான 'ஆடாவாரி மாட்டலகு அர்த்தாலே வேறுலே' என்ற படத்தின் தமிழ் ரீமேக்காக வெளிவந்த 'யாரடி நீ மோகினி' படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடித்தார். தற்போது தனுஷ் நடிப்பில் உருவான சூப்பர் ஹிட் படத்தில் வெங்கடேஷ் ஹீரோவாக நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Last Updated : Oct 25, 2019, 6:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details