தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் நான்காவது படமாக கடந்த ஆண்டு வெளியான 'அசுரன்', ரசிகர்களின் பாராட்டைப் பெற்று சூப்பர் ஹிட்டானது. வசூலிலும் கலக்கிய இந்தப் படம் தெலுங்கில் வெங்கடேஷ் நடிப்பில் ரீமேக்காக 'நாரப்பா' என்ற பெயரில் உருவாகி வருகிறது. வெங்கடேஷின் 74ஆவது படமாக இப்படம் உருவாகிவருகிறது.
அசுரனின் அதே ஆக்ரோஷத்துடன் நடந்து வரும் 'நாரப்பா'! - நாரப்பா வெங்கி
தனுஷ் நடிப்பில் சூப்பர் ஹிட்டான 'அசுரன்' படத்தின் தெலுங்கு ரீமேக்கான 'நாரப்பா' படத்தின் வெங்கடேஷ் கதாபாத்திரத்தின் சிறிய வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
கலைப்புலி தாணு தெலுங்கு பதிப்பையும் தயாரிக்கிறார். இப்படத்தை ஸ்ரீகாந்த் அட்லா இயக்குகிறார். மஞ்சு வாரியர் கேரக்டரில் நடிக்கிறார் பிரியாமணி. கரைப்பல், கையில் அரிவாளுடன் நடிகர் தனுஷ் உக்கிரமான முகத்துடன் நடந்துவரும் தமிழ் 'அசுரன்' பட போஸ்டர் போன்று தெலுங்கிலும் அதே பாணியில் வெங்கடேஷ் கோபத்துடன் நடந்துவரும் போஸ்டரை வெளியிட்டு தமிழ், தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், நாளை (டிசம்பர் 13) பிறந்தநாள் கொண்டாடும் வெங்கடேஷூக்கு பரிசாக படக்குழுவினர் 'நாரப்பா' கதாபத்திரத்தின் சிறிய வீடியோ ஒன்றை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். அதில் தனுஷூ போன்றே வெங்கடேஷூம் ஆக்ரேஷத்துடன் கையில் அரிவாளும் தனுஷை போன்ற நடையுடன் வருகிறார். பின்னணி இசையும் அசுரன் படத்தின் அதே இசையே உள்ளது. இதனையடுத்து படப்பிடிப்பு விரைவில் நிறைவடைந்து ட்ரெய்லர் வெளியிடவேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்துவருகின்றனர்.