தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

எம்.ஜி.ஆர் லுக்கில் மாறிய 'அசுரன்' தனுஷ் #Asuran look 2 - அசுரன் தனுஷ்

சென்னை: தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகி வரும் அசுரன் படத்தின் அடுத்த அப்டேட்டாக இரண்டு புதிய போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளன.

Asuran second look

By

Published : Aug 22, 2019, 7:40 PM IST

நான்காவது முறையாக தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணி இணைந்துள்ள அசுரன் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. படம் அக்டோபர் 4ஆம் தேதி ரிலீஸாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், அவ்வப்போது படம் குறித்து புதிய அப்டேட்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.

இந்த நிலையில், மறைந்த நடிகர் எம்.ஜி.ஆர் போன்று மீசை வைத்து சாந்தமாகவும், கோபத்துடனும் தனுஷ் இருப்பது போன்று இரு வேறு போஸ்டர்களை நடிகர் தனுஷ் அசுரன் படத்தின் புதிய அப்டேட்டாக வெளியிட்டுள்ளார்.

#Asuran look 2

#Asuranlook2 என்ற பெயரில் இந்தப் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதள டிரெண்டிங்கில் டாப்பில் உள்ளது.

#Asuran look 2

ஏற்கனவே படத்தின் ஃபஸ்ட் லுக்காக கையில் கத்தி வைத்துக்கொண்டு பெரிய மீசையுடன் 40 வயது மதிக்கத்தக்க தோற்றத்தில் தனுஷ் இருப்பது போன்ற புகைப்படம் வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து தற்போது இ்ளவயது லுக் வெளியிடப்பட்டுள்ளது.

வெக்கை என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வரும் அசுரன் படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் தனுஷ். மலையாள நடிகை மஞ்சு வாரியர் ஹீரோயினாக நடிக்கிறார். நடிகர்கள் பிரகாஷ்ராஜ், பசுபதி, குருசோமசுந்தரம், தலைவாசல் விஜய், ஆடுகளம் நரேன், யோகி பாபு, பவன் உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள்.

படத்துக்கு இசை - ஜி.வி.பிரகாஷ் குமார். ஒளிப்பதிவு - வேல்ராஜ். வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி தாணு தயாரிக்கிறார். படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் விரைவில் வெளியிடப்படும் எனத் தெரிகிறது.

ABOUT THE AUTHOR

...view details