தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் நான்காவது படமாக சமீபத்தில் வெளிவந்திருக்கும் படம் அசுரன். பிரபல எழுத்தாளர் பூமணியின் ''வெக்கை'' நாவலை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ள இந்தப் படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதில் மஞ்சு வாரியார், அம்மு அபிராமி, பசுபதி, பாலாஜி சக்திவேல், கென் கருணாஸ் உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இதற்கு இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார். மேலும், படத்தில் சர்ச்சையான காட்சிகள் இருப்பதாகக் கூறப்பட்டாலும் பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.