நான்காவது முறையாக இயக்குநர் வெற்றிமாறன் - நடிகர் தனுஷ் கூட்டணியில் உருவாகிவரும் படம் 'அசுரன்'. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியார் நடிக்கிறார். வி. கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.
இந்நிலையில், அக்டோபர் 4ஆம் தேதி இப்படம் உலகம் முழுவதும் வெளியாக உள்ளதாக ஏற்கனவே படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில் படத்தின் இசையாமைப்பாளர் ஜி.வி. பிராகஷ் தனது ட்வீட்டர் பக்கத்தில் முக்கிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.