சென்னை: தனுஷ் தனது ட்விட்டர் பயோவில் ஆக்டர் என்பதற்கு பக்கத்தில் அசுரன் என்று மாற்றியுள்ளார். இதை அவரது ரசிகர்கள் இந்திய அளவில் ட்ரெண்ட் செய்துள்ளனர்.
தனுஷ் தற்போது தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிப் படங்களில் பிஸியாக நடித்துவருகிறார். அவர் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள ‘ஜகமே தந்திரம்’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
இந்திய அளவில் ட்ரெண்டான ‘அசுரன் தனுஷ்’ - அசுரன் தனுஷ்
தனுஷ் தற்போது தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிப் படங்களில் பிஸியாக நடித்துவருகிறார். அவர் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள ‘ஜகமே தந்திரம்’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
Asuran dhanush india trending
இதனை தொடர்ந்து அவரது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் ’நானே வருவேன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் தனுஷுக்கு ஒரு பட்டப்பெயர் வைக்க ஆசைப்படுவதாக செல்வராகவன் கூறியிருந்தார்.
இந்நிலையில், தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் உள்ள பயோவில் பெயருக்கு கீழே வெறும் ஆக்டர் என்றுதான் இதுவரை குறிப்பிட்டிருந்தார். தற்போது அதற்கு முன்பாக அசுரன் என்ற வார்த்தையை இணைத்துள்ளார். இதைக் கண்ட அவரது ரசிகர்கள் ட்விட்டரில் இதை இந்திய அளவில் ட்ரெண்ட் செய்துள்ளனர்.