தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'எவனானாலும் தெறிக்க விடும்' விக்ரம் பிரபு! 'அசுரகுரு' சிங்கிள் டிராக் - எவனானாலும் தெறிக்க விடுவான்

விக்ரம் பிரபு நடித்துள்ள 'அசுரகுரு' படத்தில் இடம்பெற்றுள்ள 'எவனானாலும் தெறிக்க விடுவான்' என்ற பாடல் வெளியாகியுள்ளது.

'எவனானாலும் தெறிக்க விடும்

By

Published : Apr 15, 2019, 11:53 PM IST

'துப்பாக்கி முனை' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விக்ரம் பிரபு நடித்து வரும் படம் 'அசுரகுரு'. இப்படத்தை இயக்குநர் மோகன்ராஜாவிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த ராஜ்தீப் என்பவர் இயக்கியுள்ளார். ஜே.எஸ்.பி.பிலிம் ஸ்டுடியோஸ் சார்பில் ஜே.சதீஷ்குமார் தயாரிக்கும் இப்படத்தில் மகிமா நம்பியார், யோகி பாபு, ஜெகன், முனீஸ்காந்த் ஆகியோர் நடிக்கின்றனர்.

கடந்த டிசம்பர் மாதம் 21ஆம் தேதி வெளியான 'அசுரகுரு' படத்தின் டீசர் ரசிகர்களின் மனதை கவர்ந்தது. பணம் கடத்தல் சம்பவத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. விக்ரம் பிரபு பணத்தை கொள்ளையடிப்பவராக, காவல் துறைக்கு தண்ணி காட்டும் நாயகனாக நடித்துள்ளார். இந்நிலையில், அசுரகுரு படத்தில் இடம்பெற்றுள்ள 'எவனானாலும் தெறிக்க விடுவான்' என்னும் பாடல் தற்போது வெளியாகியுள்ளது. இந்தப் பாடலை இயக்குநர் மோகன் ராஜா தனது வலைதள பக்கத்தில் வெளியிட்டார்.

பயங்கர எனர்ஜிட்டிக்காக உருவாகியுள்ள இந்தப் பாடல் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் திருடச் செல்லும் இடத்தில் தப்பிக்க முயற்சி செய்யும்போது வரும் பாடலாக அமைந்துள்ளது. விக்ரம் பிரபு நடித்த படங்களில் ஒரு சில படங்கள் மட்டுமே ரசிகர்களின் கவனத்தை பெறுகிறது. வெற்றியைத் தேடி ஓடிக்கொண்டிருக்கும் விக்ரம் பிரபுவிற்கு 'அசுரகுரு' யாராலும் அசைக்க முடியாத அசராத குருவாக இருக்கும் என்பதில் முழு நம்பிக்கை கொண்டிருக்கிறார்.

ABOUT THE AUTHOR

...view details