#AskAtlee என்ற ஹேஷ்டேக்கில் தன்னிடம் கேள்வி கேட்ட மனைவிக்கு அட்லி ரொமான்ஸ் பதிலால் இணையத்தை வெறித்தனமாக்கியுள்ளார்.
திரையுலக பிரபலங்கள் ட்விட்டரில் தங்கள் ரசிகர்களுடன் கலந்துரையாடுவது வழக்கம். அந்த வகையில் ‘பிகில்’ படத்தை இயக்கிய இயக்குநர் அட்லி, #AskAtlee என்ற ஹேஷ்டேக்கில் தன்னிடம் கேள்வி கேட்கும்படி கூறியிருந்தார். இதில் விஜய் ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பியிருந்தனர். இவர்களின் கேள்விக்கு அட்லியும் பதிலளித்து வந்தார்.
பிரியாவின் கேள்வியும் அட்லியின் பதிலும் அப்போது இயக்குநரின் மனைவியும் நடிகையுமான பிரியாவும் சமூக வலைதளத்தில், ஏய் பாப்பா நீ படம் முடிச்சுட்டு என்கூட டைம் ஸ்பெண்ட் பண்ணாமா இன்டர்வியூ கொடுக்குற என்று கேள்வி எழுப்பியிருந்தார். இவரின் இந்தக் கேள்விக்கு பதிலளித்த அட்லி, வந்துடுவேன் பாப்பா வந்துடுவேன் ஐந்தே நிமிடத்தில் எனப் பதிலளித்துள்ளார். இவர்களின் இந்த ரொமன்ஸை ரசிகர்கள் ரசித்தும் கலாய்த்தும் வருகின்றனர்.
இதையும் வாசிங்க: இதுக்கு ஒரு எண்டே கிடையாதா? 'பிகில்' படத்துக்கு அடுத்த சோதனை!