'மங்காத்தா', 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் அறியப்படுபவர் அஷ்வின். இவர் மணிரத்னத்தின் கனவு ப்ராஜெக்டான ‘பொன்னியின் செல்வன்’ கதையில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பிரமாண்ட ப்ராஜெக்டில் நடிக்க தேர்வு செய்யப்பட்டிருப்பது பற்றி அஷ்வின் நெகிழ்ந்து பதிவு செய்துள்ளார்.
ஆயுத எழுத்து முதல் பொன்னியின் செல்வன் வரை - மணிரத்னம் படத்தில் அஷ்வின் - பொன்னியின் செல்வன்
மணிரத்னத்தின் கனவு ப்ராஜெக்டான ‘பொன்னியின் செல்வன்’ கதையில் நடிக்க அஷ்வின் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

Ashwin to play a important character in Maniratnam ponniyin selvan
இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், இந்தப் பயணத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறேன். ஆயுத எழுத்து படத்தில் கல்லூரி மாணவர்கள் கூட்டத்தோடு கோஷமிட்டுக் கொண்டிருந்தேன். தற்போது பொன்னியின் செல்வன் கதையில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருப்பது கூடுதல் மகிழ்ச்சி அளிக்கிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.