ட்ரெண்ட்ஸ் ஆர்ட் நிறுவனம் தயாரிப்பில், குக் வித் கோமாளி பிரபலம் அஸ்வின் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'என்ன சொல்ல போகிறாய்?'. ஹரிஹரன் இயக்க, அவந்திகா, தேஜஸ்வினி, குக்-வித் கோமாளி புகழ், டெல்லி கணேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
விவேக் மெர்வின் இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கூட இளைஞர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவானது இன்று (டிச.5) சென்னையில் நடைபெற்றது.
சிம்புவும், சிவகார்த்திகேயனும்...
அப்போது பேசிய கதாநாயகன் அஸ்வின், "இயக்குநர் ஹரிஹரனின் முதல் கதைக்கு நான் ஓகே சொல்லவில்லை. இப்போது ஓகே சொல்லி நடித்திருப்பது வேறு கதை. அவரது அலுவலகத்தில் எவ்வளவு முறை சாப்பிட்டிருப்பேன் என எனக்கே தெரியாது. பல முறை எனது பசியைப் போக்கி வயிற்றை நிரப்பியது இயக்குநரின் அலுவலகம்தான்.