ஜனங்களின் கலைஞன் எனப் போற்றப்படும் நடிகர் விவேக் நெஞ்சுவலி காரணமாக நேற்று (ஏப்ரல் 16) சென்னை வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டு, அங்கு அவருக்கு எக்மோ மருத்துவ முறை அளிக்கப்பட்டது.
விவேக் உயிருடன் இல்லை என்பதை நம்பமுடியவில்லை: கிரிக்கெட்டர் அஸ்வின் - இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின்
சென்னை: மறைந்த நடிகர் விவேக்கிற்கு இந்திய கிரிக்கெட் அணி வீரர் அஸ்வின் தனது ட்விட்டர் வாயிலாக இரங்கல் தெரிவித்துள்ளார்.

vivek
இந்த நிலையில் சிகிச்சைப் பலனளிக்காமல் நடிகர் விவேக் இன்று (ஏப்ரல் 17) அதிகாலை 4.35 மணியளவில் காலமானார். இதனையடுத்து விவேக்கின் மரணத்திற்கு திரைப்பிரபலங்களும் ரசிகர்களும் சமூகவலைதளங்கள் வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில், இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் தனது ட்விட்டர் பக்கத்தில், "நடிகர் விவேக்கின் குடும்பத்தினர், அவரது ரசிகர்களுக்கு ஆழந்த அனுதாபங்கள். நீங்கள் உயிருடன் இல்லை என்பதை நம்ப முடியவில்லை" என தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.