ட்ராமெடி (Dramedy) எனும் பதம் வெளிநாட்டு திரைப்படங்களில் தற்போது அதிகம் புழங்கும் ஜானராக இருக்கிறது. நம் நாட்டில் அந்த வகை படங்கள் ஏற்கனவே ஒரு பகுதியாக இருந்து வருகின்றன. அதுவும் தமிழில் இந்த சொல் புழக்கத்திற்கு வரும் முன்பாகவே அவ்வகைப் படங்கள் வெளிவந்துள்ளன. நாம் அற்புதமான குடும்ப படங்கள் பலவற்றைத் தந்திருக்கிறோம்.
உறவுகளின் சிக்கல்களை, மேன்மையை உணர்வுப்பூர்வமாக, நகைச்சுவை கலந்து சொன்ன கதைகள் இங்கு ஏராளம். அந்த வகையில் நகைச்சுவை பொங்கும் உணர்வுப்பூர்வமான குடும்ப காமெடி டிராமாவை தனது அடுத்த படமாக தயாரிக்கவுள்ளார் கெனன்யா ஃப்லிம்ஸ் தயாரிப்பாளர் ஜே. செல்வகுமார்
இன்னும் தலைப்பிடப்படாத 'புரோடக்சன் நம்பர் 7' எனும் இந்த படத்தில் அசோக் செல்வன், நிஹாரிகா நடிக்கிறார்கள். இயக்குநர் சுசீந்திரனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய ஸ்வாதினி இப்படத்தில் அறிமுக இயக்குநராக அவதாரம் எடுக்கவுள்ளார். இப்படத்தின் இசையமைப்புப் பணிகளை லியான் ஜேம்ஸ் தற்போது தொடங்கியுள்ளார்.
இதுகுறித்து கெனன்யா ஜே. செல்வகுமார் கூறுகையில், ”எங்களின் கெனன்யா ஃப்லிம்ஸ் சார்பில் எப்போதும் புதிய திறமைகளை அறிமுகம் செய்வதிலும் உலகமெங்கும் இருக்கும் அனைத்து ரசிகர்களும் ரசிக்கும்படியான வித்தியாசமான கதைகளைத் தயாரிப்பதையும் முக்கியக் குறிக்கோளாக கொண்டிருக்கிறோம்.