தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ஸ்டைலாக சிகரெட் பிடித்து வீடியோ வெளியிட்ட விஜய் ஆண்டனி பட நடிகை! - ஆஷிமா நார்வால் புது படம்

நடிகை ஆஷிமா நார்வால் சிகரெட் பிடிக்கும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

ஆஷிமா நார்வால்
ஆஷிமா நார்வால்

By

Published : Oct 16, 2020, 7:51 AM IST

தமிழில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான ’கொலைகாரன்’ திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகை ஆஷிமா நார்வால். இவர் தெலுங்கில் 'ஜெர்ஸி’ திரைப்படத்தில் நடித்திருந்தார். இவர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிகிரெட் பிடிக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டு கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில், “புகைப்பிடித்தல் உடல் நலத்திற்கு தீங்கானது என்பார்கள். ஹைதராபாத் வீதிகளில் இப்போது நடமாடுவதும் அப்படியானது தான். வெள்ளம் ஹைதராபாத்தைச் சுழற்றி அடித்திருக்கிறது. தாழ்வான பகுதிகள் எங்கும் தண்ணீர் சூழ்ந்திருக்கிறது. மரங்கள் அனைத்தும் கீழே வீழ்ந்து, வீதிகளை மறைத்திருக்கின்றன.

நாம் பூமித்தாயை நிறைய காயப்படுத்திவிட்டோம் இப்போது பூமித்தாய் அதற்கெதிரான பலனை தருகிறாள். பூமியை காயப்படுத்தாதீர்கள் அப்படி செய்தால் நம்மை பன்மடங்கு பூமித்தாய் திருப்பித் தாக்குவாள். இது உலகின் மறுக்க முடியாத நியதி. பின்குறிப்பு: ஒரு படத்தின் கதாபாத்திரத்திற்காக போலியாக புகைப்பிடிக்கக் கற்று கொண்ட எனது புகைப்படம் பரவியபோது, உங்களிடமிருந்து எத்தனை அதிர்ச்சியையும், எதிர்வினைகளையும் தந்தது.

ஆனால் பூமியை புகையால் கார், பைக், ஸ்கூட்டர், தொழிற்சாலைகள் என எல்லாவற்றாலும், எவ்வளவு காயப்படுத்துகிறோம். அது ஏன் நம்மில் யாருக்கு அதிர்ச்சியை தருவதில்லை. உண்மையில் அது தான் நம் அனைவருக்கும் அதிர்ச்சி தர வேண்டும். இனியேனும் பூமித்தாயை நேசித்து பாதுகாப்போம்” என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:திரைப்படமாகவுள்ள மாவீரன் நெப்போலியனின் போர் வரலாறு!

ABOUT THE AUTHOR

...view details