தமிழில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவான படம் 'கொலைகாரன்'. இப்படத்தில் தாரணி - ஆராதனாவாக நடித்தவர் நடிகை ஆஷிமா நர்வல். இவர் தற்போது பிக்பாஸ் புகழ் ஆரவ் உடன் 'ராஜபீமா' என்னும் புதிய படத்தில் நடித்துள்ளார். விரைவில் இப்படம் திரைக்கு வர உள்ளது.
தற்போது ஆஷிமா தனது தாயாருடன் கோவாவுக்கு சுற்றுலா சென்றுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், மனதை ஒருமுகப்படுத்த, உடலை புத்துணர்வூட்ட ஒரு சிறு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டேன். கடற்கரை பயணம் என்பது ஆன்மாவின் தியானம் என்றார்கள். பயணம் எப்போதும் புதிதாய் கற்றுக்கொள்ள, ஆன்மாவை புதுப்பித்துக்கொள்ள ஒரு அற்புத வாய்ப்பு. பயணங்கள் எப்போதும் உற்சாமூட்டுபவை.