ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பில் ஆர்யா, இந்துஜா, மஹிமா நம்பியார் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘மகாமுனி’. இப்படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் சாந்த குமார். இவரின் முந்தைய படமான ‘மௌனகுரு’, தமிழ் சினிமா ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது. இதனால் ‘மகாமுனி’ படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
மெகா ஹிட் ஆகுமா? மகாமுனி திரைப்படம்! - Arya magamuni movie
ஆர்யா ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் ‘மகாமுனி’ திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் வெளியாகவுள்ளது.
மகாமுனி திரைப்படம்
அருண் பத்மநாபன் ஒளிப்பதிவில், சாபு ஜோசப் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்களை கவிஞர் முத்துலிங்கம் எழுத, எஸ்.எஸ்.தமன் இசையமைத்துள்ளார்.
‘மகாமுனி’ படத்தின் டீசர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது. ஆர்யா நல்ல ஹிட் கொடுத்து நீண்டகாலமாகிறது, இப்படம் ஆர்யாவுக்கு ஒரு நல்ல கம் பேக்-ஆக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்புகள், தொழில்நுட்ப பணிகள் ஆகியவை முடிந்து, வரும் செப்டம்பர் மாதம் ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.