நடிகர்கள் ஆர்யா - விஷால் இணைந்து நடிக்கும் படம் 'எனிமி'. இப்படத்தை 'இருமுகன்', 'அரிமா நம்பி', 'நோட்டா' போன்ற படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கிவருகிறார்.
ஆர்யாவின் 'எனிமி' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு! - எனிமி பட அப்டேட்
சென்னை: விஷாலுடன் இணைந்து ஆர்யா நடிக்கும் 'எனிமி' படத்தில் ஆர்யாவின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.
மினி ஸ்டூடியோஸ் சார்பில் வினோத்குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசை அமைக்கிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். மிகப்பெரிய பட்ஜெட்டில் ஹைதராபாத் ராமோஜி பிலிம் சிட்டி, சென்னை உள்ளிட்ட இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது.
'எனிமி' படத்தில் விஷாலுக்கு மிருணாளினி ஜோடியாக நடிக்கிறார். ஆர்யாவுக்கு மம்தா மோகன் தாஸ் ஜோடி என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் எனிமி திரைப்படத்தில் ஆர்யாவின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதில் ஆர்யா ஜெயிலிருந்து தப்பித்த கைதி போன்று தோற்றமளிக்கிறார்.