பா.இரஞ்சித் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான 'சார்பட்டா பரம்பரை' படத்தில் ஆர்யா, பசுபதி இணைந்து நடித்து அசத்தியிருந்தனர். அதிலும் குறிப்பாக ஆர்யா, பசுபதியைச் சைக்கிளில் அழைத்துச் சென்ற காட்சியை வைத்து சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள் வெளியாகி ட்ரெண்டானது.
இதனையடுத்து ட்விட்டரில் பசுபதி பெயரில் ஏகப்பட்ட போலி கணக்குகள் உருவாகின. இந்நிலையில் எதற்கு போலி கணக்கு, நானே ட்விட்டர் தளத்திற்கு வருகிறேன் என பசுபதி புதிய கணக்கை தொடங்கிவிட்டர்.
இதனையொட்டி பசுபதிக்கு, அட்வைஸ் கொடுத்து ஆர்யா ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "வாத்தியாரே இதுதான் ட்விட்டர் வாத்தியாரே. பாக்ஸிங்கை விட ரத்த பூமி. உன்னோட பெயரில் இங்க நிறைய பேரு இருக்காங்க’னு தெரிஞ்சும் ஒரிஜினல் நான் தான்’னு உள்ளவந்த பார்த்தியா, உன் மனசே மனசு தான். வா வாத்தியாரே, இந்த உலகத்துக்குள்ள போகலாம்" என குறிப்பிட்டுள்ளார்.
ஆர்யாவின், பதிவிற்கு பதிலளித்த பசுபதி, ‘ஆமாம் கபிலா, பாக்ஸிங்கே உலகமுன்னு இருந்துட்டேன். பரம்பரைக்கு ஒண்ணுன்னா மொத ஆள வந்துருவேன்.
நான் உன் சைக்கிள்ள பின்னாடி உட்கார்ந்துக்கிறேன். என்னை எல்லா இடத்துக்கும் கூட்டிக்கிட்டு போ’ என தெரிவித்துள்ளார். நகைச்சுவையான இவர்களின் பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.