'அவன் இவன்' படத்தை தொடர்ந்து நடிகர்கள் ஆர்யா - விஷால் இணைந்து நடிக்கும் படம் 'எனிமி'. இப்படத்தை 'இருமுகன்', 'அரிமா நம்பி', 'நோட்டா' போன்ற படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கியுள்ளார்.
இப்படத்தில் ஆர்யா - விஷாலுடன் மம்தா மோகன்தாஸ், மிருணாளினி, பிரகாஷ்ராஜ், கருணாகரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மினி ஸ்டூடியோஸ் சார்பில் வினோத்குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசை அமைக்க சாம் சி.எஸ். பின்னணி இசையமைத்துள்ளார்.
ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். மிகப்பெரிய பட்ஜெட்டில், சென்னை, சிங்கப்பூர் உள்ளிட்டப் பல்வேறு இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது.