பா. ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து உருவாகிவரும் திரைப்படம் 'சார்பட்டா பரம்பரை'. இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று (நவம்பர் 2) வெளியாகி சமூக வலைதளத்தில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஆர்யாவின் 'சார்பட்டா பரம்பரை' படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் வெளியீடு - சார்பட்டா பரம்பரை புகைப்படங்கள்
ஆர்யா நடிப்பில் உருவாகிவரும் 'சார்பட்டா பரம்பரை' படத்தின் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
ஆங்கிலேயர்களின் குத்துச்சண்டையான பாக்ஸிங்கை மையமாக வைத்து வடசென்னை வீரரின் வாழ்வு குறித்து இந்தப் படம் உருவாகிவருவதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதில் ஆர்யாவுக்கு ஜோடியாக துஷாரா நடிக்கிறார்.
பசுபதி, ஜான் விஜய், கலையரசன் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமூக வலைதளத்தில் வரவேற்பைப் பெற்றதையடுத்து நன்றி தெரிவிக்கும்விதமாக ஆர்யா படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்கள் வெளியான சில மணி நேரத்திலேயே ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டுவருகிறது.