நடிகர் ஆர்யா நடிப்பில் கடைசியாக வெளியான படம் காப்பான். அதைத் தொடர்ந்து தனது மனைவியும், நடிகையுமான சயீஷாவுடன் இணைந்து ‘டெடி’ படத்தில் நடித்துள்ளார்.
இதையடுத்து ஆர்யா தற்போது இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். ஆர்யாவின் 30ஆவது படமான இப்படத்திற்கு சல்பேட்டா என்று பெயரிட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் 1970களில் நடந்த குத்துச்சண்டையை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் ஆர்யாவுக்கு ஜோடியாக துஷாரா நடிக்க, கலையரசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.