இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம், 'சார்பட்டா பரம்பரை'. இப்படத்தில் துஷாரா, கலையரசன், காளி வெங்கட் ஆகியோர் நடித்து வருகின்றனர். விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்புக்கு இடையே, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது.
அதில் ஆர்யா தனது உடலமைப்பை முழுவதுமாக மாற்றி, மாஸாக தோன்றியிருந்தார். அவரின் கடின உழைப்பைக் கண்டு வியந்த பலரும், அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில் ஆர்யாவின் உழைப்பைப் பாராட்டி நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 'என் அன்பான எனிமி டார்லிங் ஜாமி. உனது கடின உழைப்பைக் கண்டு வியக்கிறேன். உன் உடலமைப்பில் பாதியாவது, எனக்கு இருக்க வேண்டும் என விரும்புகிறேன். ஆர்யா, பா.ரஞ்சித் இருவரும் இணைந்து கலக்கப்போகின்றனர்' என்று குறிப்பிட்டுள்ளார்.