தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

அவன் - இவன் திரைப்பட வழக்கு ஒத்திவைப்பு! - actory arya

சென்னை: சிங்கம்பட்டி ஜமீன் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் நடிகர் ஆர்யா மற்றும் இயக்குநர் பாலா நேரில் ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

arya
arya

By

Published : Sep 17, 2020, 2:58 AM IST

நடிகர் ஆர்யா, விஷால் நடிப்பில் 2011ஆம் ஆண்டு வெளியான அவன் - இவன் திரைப்படம் நெல்லை மாவட்டம் சிங்கம்பட்டி ஜமீன்தார் மற்றும் சொரிமுத்து அய்யனார் கோயில் சார்ந்த கதையுடன் எடுக்கப்பட்டிருந்தது. இயக்குநர் பாலா இந்த படத்தை இயக்கியிருந்தார்.

இந்தப் படத்தில் சிங்கம்பட்டி ஜமீன் குறித்தும், சொரிமுத்து அய்யனார் கோயில் குறித்தும் அவதூறாக பேசியதாக அம்பை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு பல்வேறு கட்ட விசாரணையில் நடைபெற்று வரும் நிலையில், ஏற்கனவே நடிகர் ஆர்யா, இயக்குநர் பாலா உள்ளிட்டோர் இந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

இந்நிலையில், இந்த வழக்கு நேற்று (செப்.16) மீண்டும் விசாரணைக்கு வந்தது, ஆனால் திரைப்படக் குழு சார்பில் யாரும் ஆஜராகவில்லை. இதையடுத்து நடிகர் ஆர்யா தரப்பு வழக்கறிஞர் கேட்டுக்கொண்டதன் பேரில் வழக்கை வரும் 28ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி உத்தரவிட்டார். எனவே அன்றைய தினத்தில் நடிகர் ஆர்யா மற்றும் இயக்குநர் பாலா ஆகியோர் அம்பை நீதிமன்றத்தில் ஆஜராகும் பட்சத்தில் வழக்கு விசாரணை இறுதி கட்டத்தை எட்டும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க:'அய்யப்பனும் கோஷியும்' தமிழ் ரீமேக்கில் இணையும் ஆர்யா, சசிகுமார்?

ABOUT THE AUTHOR

...view details