முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி ஆர்யா ரசிகர் மன்றம் சார்பாக, சென்னை செம்மொழி பூங்காவில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் நடிகர் ஆர்யா கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தார். அப்போது பேசிய ஆர்யா, "விவேக்கிற்கு நான் கடந்த ஆண்டு ஒரு சத்தியம் செய்தேன். அப்துல் கலாமின் பிறந்தநாளன்று என்னுடன் வந்து செடி நட வேண்டும் என்றார். நான் கண்டிப்பாக வருவேன் என அவருக்கு வாக்குறுதி கொடுத்தேன்.