தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ஆர்யாவின் 'கேப்டன்' படப்பிடிப்பு நிறைவு - கேப்டன் சயின்ஸ் பிக்‌ஷன் திரைப்படம்

ஆர்யா நடிப்பில் உருவாகிவரும் கேப்டன் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளதால், திரைப்பட வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிக்கப்படுமா என ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்துள்ளனர்.

ஆர்யாவின் 'கேப்டன்' படப்பிடிப்பு நிறைவு
ஆர்யாவின் 'கேப்டன்' படப்பிடிப்பு நிறைவு

By

Published : Feb 13, 2022, 5:01 PM IST

‘டெடி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் சக்தி சௌந்தர் ராஜன் - ஆர்யா கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கேப்டன்’. இத்திரைப்படம் அதிரடி சயின்ஸ்பிக்சன் பாணியில் உருவாகியுள்ளது.

திங்க் ஸ்டுடியோஸ் (Think Studios) நிறுவனத்துடன், ஆர்யாவின் தி ஷோ ப்யூபிள் (The Show People) நிறுவனம் இணைந்து இத்திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. சிம்ரன், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, கோகுல் ஆனந்த், சுரேஷ் மேனன், காவ்யா ஷெட்டி, ஹரிஷ் உத்தமன், பரத் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கியப் பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கடந்த ஆண்டு அக்டோபரில் தொடங்கிய படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. முக்கியக் காட்சிகள் வட இந்தியாவின் அடர்ந்த காடுகளிலும், இறுதிகட்ட காட்சிகள் குலுமணாலியிலும் படமாக்கப்பட்டுள்ளன. இயக்குநர் திட்டமிட்டபடி படப்பிடிப்பை முடித்திருப்பதால், ஆர்யா தயாரிப்பாளராகவும் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளார்.

போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்ட நிலையில், விரைவில் படத்தை வெளியிடப் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். ஆர்யாவின் சமீபத்திய படங்களான சார்பட்டா பரம்பரை, டெடி ஆகியவை இந்திய அளவில் பெரும் வெற்றிபெற்ற நிலையில், ‘கேப்டன்’ படத்திற்கான எதிர்பார்ப்பு பெருமளவில் அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க:'நானே வருவேன்' படப்பிடிப்பு: தனுஷ், செல்வராகவன் புகைப்படம் வைரல்

ABOUT THE AUTHOR

...view details