பிரித்திவிராஜ், பிஜு மேனன் நடிப்பில் இந்த ஆண்டு வெளியாகி வெற்றியைடைந்த மலையாளத் திரைப்படம் 'அய்யப்பனும் கோஷியும்'. விமர்சன ரீதியாகவும் இந்தத் திரைப்படம் எல்லாருடைய பாராட்டுகளையும் பெற்றது.
இந்நிலையில், இந்தத் திரைப்படம் தமிழில் ரீமேக் செய்யப்படுவதாகக் கூறப்பட்டு வந்த நிலையில் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் ஆர்யாவும் சசிகுமாரும் நடிக்கவுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்திவிராஜ் நடித்த பாத்திரத்தில் ஆர்யாவும், பிஜு மேனன் பாத்திரத்தில் நடிக்க சசிகுமாரும் ஒப்பந்தமாகியிருக்கின்றனர் என்று பேசப்படுகிறது. சச்சி இயக்கத்தில் வெளியான 'அய்யப்பனும் கோஷியும்' சிறு பிரச்னை காரணமாக இரு நபர்களுக்குள் இருக்கும் தகராறை மையப்படுத்தி கதைக்களத்தை கொண்டிருக்கும்.
சமீபத்தில் 'நாடோடிகள்-2' திரைப்படத்தில் நடித்திருந்த சசிகுமார், பாக்யராஜ் நடிப்பில் வெளியான 'முந்தானை முடிச்சு' திரைப்படத்தின் ரீமேக்கில் நடிப்பதாகக் கூறப்பட்டது. ஆர்யா இயக்குநர் ரஞ்சித் இயக்கத்தில் 'சல்பேட்ட' திரைப்படத்தில் கமிட்டாகியுள்ளார்.
இதையும் படிங்க...'முந்தானை முடிச்சு'க்கு வந்துடுச்சு ரீமேக்