தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

தலைவிக்கு ஜோடியான சாமி! - ஜெயலலலிதா வாழ்க்கை வரலாற்று படத்தில் அரவிந்த்சாமி

தலைவி படத்துக்காக புதுமையான மேக்கப், நடனம் என பல்வேறு விதமாக தன்னை தயார்படுத்தி வருகிறார் கங்கனா. தற்போது அவருக்கு ஜோடியாக யார் நடிக்கப் போகிறார் என்ற கேள்விக்கு விடை கிடைத்துள்ளது.

தலைவி படத்தில் எம்ஜிஆர் வேடத்தில் நடிக்கிறார் அரவிந்த் சாமி

By

Published : Oct 4, 2019, 12:42 PM IST

மூன்று மொழிகளில் உருவாகும் தலைவி படத்தில் கங்கனாவுக்கு ஜோடியாக அரவிந்த்சாமி நடிக்கவுள்ளார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு ‘தலைவி’ என்ற பெயரில் படம் தயாராகவுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தை ஏ.எல். விஜய் இயக்குகிறார்.

படத்தில் ஜெயலலிதாவாக பாலிவுட் டாப் நடிகை கங்கனா ரணவத் நடிக்கிறார். இதில், ஜெயலலிதாவின் சிறு வயது முதல் இறப்பு வரை என நான்கு வித்தியாசமான தோற்றங்களில் நடிக்கவுள்ளார். இதற்காக ஸ்பெஷல் புரோஸ்தெடிக் (முகவார்ப்பு) மேக்கப் டெஸ்ட்டை படக்குழுவினர்கள் அமெரிக்காவில் மேற்கொண்டனர்.

மேலும் படிக்க: ரஜினி, கமல், விக்ரம் வரிசையில் 'தலைவி' கங்கனா!

இதனிடையே ஜெயலலிதாவின் உடல்மொழி, பேச்சு போன்றவற்றை அவரது படங்களை உன்னிப்பாகப் பார்த்து பயிற்சி மேற்கொண்டு வரும் கங்கனா, பரதநாட்டியமும் முறையாகக் கற்று வருகிறார்.

ஜெயலலிதாவின் கதையில் மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆரின் பங்கு மிகவும் முக்கியமானது. இதைத்தொடர்ந்து மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அந்தக் கேரக்டரில் யார் நடிக்கவுள்ளார் என்ற மில்லியன் டாலர் கேள்வி பலரிடமும் எழுந்தது.

இப்போது அதற்கான விடையாக, ஜெயலலிதாவாக நடிக்கும் கங்கனாவுக்கு ஜோடியாக எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் அரவிந்த்சாமி நடிக்கவுள்ளராம். இதனை படத்தின் தயாரிப்பாளர் உறுதிபடுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, ‘பார்ப்பதற்கு எம்ஜிஆர் போன்ற தோற்றத்திலும், இந்தியா முழுவதும் அறிந்த நடிகராகவும் இருப்பவரைத் தேடினோம். அரவிந்த்சாமி அதற்கு பொருத்தமானவராக இருப்பார் என்று கருதி அவரை ஒப்பந்தம் செய்தோம்.

முதலில் எம்ஜிஆர் வேடத்தில் நடிப்பதற்கு தயங்கிய அவர், பின்னர் அதற்கு தன்னை தயார்படுத்திக்கொண்டு சம்மதம் தெரிவித்தார். இந்த ஜோடியை திரையில் பார்ப்பதற்கு மிகவும் புதுமையாக இருக்கும்’ என்றார்.

ABOUT THE AUTHOR

...view details