உலகம் முழுவதும் பரவிவரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் ஒரு கை பார்த்துள்ளது. இதையொட்டி மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகள் எடுத்துவருகின்றன. மேலும் திரைத் துறையைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் கொரோனா வைரஸ் குறித்து ரசிகர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்து வகையில் பதிவு வெளியிட்டுவருகின்றனர்.
அந்த வகையில் நடிகர் அரவிந்த் சாமி கொரோனா வைரஸ் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், ‘’வணக்கம் மக்களே, உலகளாவிய தொற்றுநோயை நாம் எதிர்கொள்வதால் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.