தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'கரோனாவிலிருந்து தற்காத்துக் கொள்ளுங்கள்' - அரவிந்த் சாமி

கரோனா தொற்றிலிருந்து பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனக் கூறி அரவிந்த் சாமி தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

Arvind Swami
Arvind Swami

By

Published : Mar 20, 2020, 11:13 PM IST

கோவிட்-19 வைரஸ் தொற்று தற்போது சீனாவில் படிப்படியாகக் குறைந்துவருகிறது. இருப்பினும் இத்தாலி, தென் கொரியா, ஈரான் உள்ளிட்ட நாடுகளில் வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் இதுவரை 200க்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

இதைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அரசு சார்பில் நடவடிக்கைகள் ஒருபுறம் எடுக்கப்பட்டு வந்தாலும், வைரஸ் தொற்று குறித்து பிரபலங்கள் தங்களது சமூகவலைதளப் பக்கத்தில் விழிப்புணர்வு குறித்த வீடியோ, படங்களை பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் அரவிந்த் சாமி ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், ”சாதாரண மனிதர்கள் புரிந்துகொள்ளும் வகையில் வரைபடத்துடன் விளக்கப்பட்டுள்ளன. மேலும் கரோனா தொற்றுக்கு ஆளானவர்கள் அருகில் வயதானவர் இருந்தால் அவர்களுக்கு கரோனா வேகமாகப் பரவும். அதிக மக்கள் இந்தத் தொற்றுக்கு ஆளாகினால் சிகிச்சையளிப்பது மிகவும் கடினம்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

அரவிந்த் சாமி கரோனா தொற்று குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த அவ்வப்போது தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவுகளைப் பகிர்ந்து வருகிறார்.

ABOUT THE AUTHOR

...view details